வியாழன், 16 ஜனவரி, 2014

காமிக்ஸ் உண்டு ....எதிரி இல்லை ....


நண்பர்களே ...வணக்கம் ..

நலம் ..நலமா ..?

அனைத்து  காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...இந்த புத்தாண்டில் வந்த இனிய நான்கு குட்டி புத்தங்களை அனைவரும் வாங்கி படித்து இருப்பிர்கள் .நானும் உங்களை போலவே படித்து முடித்து விட்டு அடுத்த மாதம் எப்பொழுது வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன் .மாத ஆரம்பத்தில் புத்தகம் வரும் பொழுது சந்தோசமும் ...அனைத்து புத்தகமும் படித்து முடிந்தவுடன் ஒரு வெறுமையும் சூழ்வது "காமிக்ஸ் " ரசிகர்களுக்கே மட்டுமே வரும் உணர்வுகள் .நாவல் ரசிகர்களோ ...சினிமா ரசிகர்களோ தாங்கள் விரும்பி பார்க்கும் படத்தை எதிர் பார்ப்பார்கள் .கதையுளும் மனமார ஒன்றி  இருப்பார்கள் .ஆனால் படித்து  / பார்த்த பின்னர் ஹய்யோ ....முடிந்து விட்டதே ...அடுத்து என்ன ..என்றல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள் .ஆனால் "காமிக்ஸ் ரசிகர்களுக்கு " மட்டுமே படித்து முடிந்தவுடன் "அடுத்து " என்ற ஏக்கம் .சீக்கிரம்  முடிந்து விடுமே என்ற தயக்கம் . தயக்கத்தில் ஒரு நாள் ஆசிரியரின் பக்கங்கள் ..,அடுத்து வரும் விளம்பரங்கள் என பார்த்து விட்டு அடுத்த நாள் அனைத்து  கதைகளின் ஓவியங்களையும் பொறுமையாக ரசித்து விட்டு அடுத்த நாள் எப்பொழுது அமைதியான நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது படிப்பது...என்று  இப்பொழுது எல்லாம் பழகி விட்டது .நாம் காமிக்ஸ் உலகத்தில் இருக்கும் பொழுது எதிரிகள் அருகில் வந்தால் கூட கண்ணுக்கு புல படாத தன்மை இந்த மாய லோகத்தில் ஜணிதிருக்கும் பொழுது மட்டுமே என்றாலும் மிகை இல்லை .

         இந்த மாத வந்த நான்கு இதழ்களில் நான் முதலில் படித்தது "சன்ஷைன் கிராபிக் " நாவலில் வந்த தோர்களின் "பிரபஞ்சத்தின் புதல்வன் ".என்னடா கிராபிக் நாவல் மீது இப்பொழுது அவ்வளவு ஆர்வம் வந்து விட்டதா ?என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம் .கையில் அதிகம் புத்தகம் இருக்கும் பொழுது எது எனக்கு அதிகம் "பிடிக்காத " கதையோ அதை தான் முதலில் படிக்கும் ரகத்தை சார்ந்தவன் என்பதால் முதல் கதையாக "தோர்களை "தேர்ந்து எடுத்தேன் .என்னதான் ஆசிரியர் முந்தைய கிராபிக் நாவல் போல இருக்காது என்று உறுதி தந்திருந்தாலும் ஏற்கனவே பட்ட "அனுபவம் "சந்தேகத்தை 100 % தீர்க்க வில்லை என்பதாலும் ...இணைத்து வந்து இருந்த மூன்று நாயகர்களும் எப்பொழுதும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் "கிராபிக் நாவலை                                                                                                                                                                  
எடுத்து வைத்தேன் .அட்டை படமே "முந்திய அழுகாச்சி நாவல் "  போல இருக்காது என்ற நம்பிக்கையை பார்த்தவுடன் ஏற்படுத்தியது .ஆனாலும் ஒரு பயம் எட்டி பார்த்தது என்னவென்றால் வித்தியாசமான அட்டைப்பட ஓவியமும் ...உள்ளே முந்தைய நாள் ரசித்த வித்தியாச ஓவியங்களும்  கதையை "நம்பும் " விதத்தில் இருக்குமா ?இல்லை சுத்தமான குழந்தைகளுக்கான "பூத கதையாக " இருக்குமா ?என்பதே அது .ஆனால் படிக்க ..படிக்க அப்படி ஒன்றும் "பூ சுற்றும் " கதையாக தெரிய வில்லை .இதற்கு முழு பாராட்டுகளும் தமிழ் மொழி ஆக்கத்தில் ஈடுபட்டவர்க்கு தான் .இப்படி பட்ட கதைகளை படிக்க தெரிந்த குழந்தைகளுக்கும் (என்னை போல ) ஏற்கும் படி இருக்க வேண்டும் ..முதிர்ந்த ரசிகர்களும் ஏற்கும்படி "குழந்தைத்தனமாக "இல்லாமல் இருக்க வேண்டும் .அதில் மொழி பெயர்பாளர் வெற்றி பெற்று விட்டார் என்பது உண்மை .இரண்டு கதைகளும் படிக்கும் பொழுது "காதில் பூ சுற்றும் " எண்ணம் எல்லாம் வரவில்லை .அதிலும் இரண்டாவது கதையின் முடிவு எதிர் பார்க்காதது .

            எனது மகன் தானாக படிக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டால் அவன் "காமிக்ஸ் "ஆர்வத்தை வளர்க்க வைக்கும் புத்தகமாக இது முதலில் இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை .குறைகளை சொல்லாவிட்டால் எப்படி ? மிக ..மிக பெரிய குறை ஆசிரியர் பக்கம் இல்லாதது .முதல் சன்ஷைன் கிராபிக் நாவலாக மலர்ந்த இதில் ஆசிரியர் கொஞ்சமாகவது எட்டி பார்த்து விட்டு வந்து இருக்கலாம் .அடுத்து குட்டியான புத்தகத்தில் இரண்டு கதைகளை வெளி இட்டதை விட ஒரு முழு நீள கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .ஒரு வேலை தோர்கள் கதை எல்லாம் இப்படி "குட்டியான "கதையாக தான் இருக்குமா என்பது "பெங்களூர் கார்த்திக் " போன்றவர்கள் மட்டுமே அறிவார்கள் .நாங்கள் எல்லாம் தமிழ் காமிக்ஸை தவிர வேறு ஒன்றை நோக்காதவர்கள் .அதே சமயம் "கதை "பிடிக்காத நண்பர்கள் இருக்கலாம் .ஆனால் அவர்கள் இந்த கதைகளின் "ஓவியத்தை " ரசிக்காமல் இருக்க முடியாது .அதுவும் "ராஜ் குமார் "போன்ற ஓவிய ரசிகர்களுக்கு இது  மறக்க முடியாத விருந்து .மொத்தத்தில் தைரியமாக "தோர்களுக்கு " பாஸ் மார்க் அளிக்கலாம் .அளிக்க விரும்பாதவர்கள் அவர்கள் குழந்தைகளுக்காக "பாஸ் " மார்க் அளித்தே தீர வேண்டும் .

         அடுத்து எடுத்து படித்தது "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை ".ஏற்கனவே வந்த முதல் "கமாஞ்சே " கதை ( சரியாக சொன்னால் இரண்டாவது ) என்னை ஏமாற்ற வில்லை என்பதால் எந்த தயக்கமும் இல்லை .அழகான ஓவியங்களும் ...தெளிவான கதை ஓட்டமும் "கௌ -பாய் "உலகத்தில் நம்மை உலவ செய்கிறது .செவ்விந்தியர் ..,வெள்ளையர் என இருபக்க பார்வையிலும் உள்ள தர்மங்களை சரியாக வாசகர்க்கு கொண்டு  சென்று எவர் பக்கமும் "வெறுப்பை " சாய்க்காத வண்ணம் முடிவை கொண்டு வந்ததில் ஆசிரியரின் திறமையை காட்டுகிறது .கௌ பாய் ரசிர்களை  முழுமையாக திருப்தி படுத்தும் இதழ்  . அதே சமயம் ,.சில இடங்களில் வந்த எழுத்து பிழைகளை தவிர்த்து இருக்கலாம் .மற்ற படி இந்த இதழும் மன நிறைவை தந்த இதழ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

                அடுத்து வந்த இரு இதழ்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்த "ப்ருனோ ".சாகசமான "சாக மறந்த சுறா " மற்றும் பிரின்ஸ் அவர்களின் மறுபதிப்பு சாகசமான "பயங்கர புயல் "..இந்த இரண்டு அட்டை படங்களும் மற்ற அட்டை படங்களுக்கு குறை வைக்க வில்லை .அதிலும் "பயங்கர புயல் " அட்டைபடம் இலங்கை வாசகர் "பிரதிப் " அவர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான முறையில் வந்துள்ளது .ப்ருனோ சாகசத்தை குழுவினரோடு எதிர் பார்தால் "தனி ஆவரணத்தில் " வந்து கலக்கியது மகிழ்ச்சியை தந்ததா இல்லை வருத்தத்தை தந்ததா என சொல்ல முடிய வில்லை .பிரின்ஸ் வழக்கம் போல கலக்கி விட்டார் .

           மொத்தத்தில் இந்த மாதம்  அதிகம் "குறை " ஏதும் இல்லாமல் சிறந்த முறையில் ஒன்றுக்கு நான்காக புத்தகத்தை அளித்து ..,அனைத்து இதழ்களின் சித்திர தரம் ..,அச்சு தரம் ..,அழகான மொழி ஆக்கம் .., அட்டகாசமான அட்டைப்படங்கள் என காமிக்ஸ் ரசிகர்களுக்கு அழகான புத்தாண்டையும் ..,அருமையான பொங்கலையும் அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி .

        மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .....நன்றி ..

சனி, 11 ஜனவரி, 2014

காமிக்ஸ் புத்தாண்டு.....

நண்பர்களே ...வணக்கம் .

நலம் ..,நலமா ..?

இந்த வருட ஆரம்பம் இரு முறையில் என்னை சந்தோஷ படுத்தியது .ஒன்று பிரபல இரட்டை எழுத்தாளர்களும் ..,திரை பட வசனகர்த்தர்களும் ..,தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்களின் " ஐ " திரைப்பட வசனகர்த்தர் ஆன "சுபா "அவர்களின் புத்தாண்டு வாழ்த்து அட்டை கிடைக்க பெற்றேன் .நான்கு ,ஐந்து வருடங்களுக்கு முன் தவறாமல் நான் வாழ்த்து அட்டை ..,கடிதம் அனுப்பும் பொழுது அவரது பதிலும் ..,வாழ்த்தும் தவறாமல் எனக்கு வந்தடையும் .ஆனால் மங்கி போன "நாவல் " விற்பனைகளால் கடிதம் எழுதுவதையும் ..,அலைபேசி வசதிகளால் "வாழ்த்து அட்டைகளும் " இப்பொழுது கிடைக்க பெறா சூழ்நிலையில் பல வருடங்களாக அவரிடம் தொடர்ப்பு இல்லா நிலையில் ..இப்பொழுது திரைப்பட துறையில் மிக பிஸியாக பணியாற்றும் நிலையில் அவரின் "புத்தாண்டு வாழ்த்து "அட்டை கிடைக்க பெற்றேன் .எப்பொழுதும் "காமிக்ஸ் " தவிர வேறு எதுவும் இங்கே எழுத எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் இங்கே நான் இதை கூற காரணம் அவரின் வாழ்த்து அட்டையில் காண பட்ட பொன் மொழி .ஒவ்வொரு முறை அவரின் வாழ்த்து அட்டையில் பொன்மொழி காணப்பட்டு அதன் படி நடக்க முயற்சிப்பேன் .இம்முறை அவரின் பொன்மொழியில் எனக்கு வேறு பாடு காணப்பட்டதால் இங்கே இறக்கி வைக்கிறேன் .

                   "   பொய்யாக இருந்து மகிழ்விப்பவராய் இருப்பதை விட
                       உண்மையாய் இருந்து வெறுக்க படுவது மேல் "


என்பதே அந்த பொன் மொழி .நடைமுறையில் இது சாத்தியமா என மனதுக்குள் ஒரு குழப்பம் .இப்பொழுது உள்ள வாழ் முறையில் பல சமயம் "பொய் " ஆக தான் நடிக்க வேண்டி உள்ளது .அப்படி இருந்தும் பலரால் நாம் வெறுக்க படுகிறோம் ...,வருத்தம் அடைய வைக்கிறோம் .அனைத்து காலமும் நாம் "உண்மையாக " இங்கே இருந்தால் அனைவருக்கும் "எதிரி "ஆக தான் நாம் பார்க்க படுவோம் என்று பயப்படாமல் இருக்க முடிய வில்லை .நாம் சரியாக இருந்தால் கூட பிறரை "வருத்த பட "வைப்பதை தவிர்க்க முடியாது .எடுத்து காட்டாக நமது "காமிக்ஸ் ஆசிரியர் " அவர்களை எடுத்து கொள்ளுங்கள் .பலவற்றையும் யோசித்து ..,அதன் சாதக .,பாதகம் அனைத்தும் அலசி தான் ஒவ்வொரு இதழ்களையும் வெளி இடுகிறார் .ஆனால் "ஒல்லி புத்தகமாக " வந்தால் சிலருக்கு அவர் மீது வருத்தம் . "குண்டு புத்தகம் "ஆக வந்தால் விலை அதிகம் என சிலருக்கு  வருத்தம் . "கிராபிக் நாவல் "என அழுகாச்சி கதைகளை வெளி இட்டால் சிலருக்கு கோபம் .."அதிரடி கதைகள் "தொடர்ந்து வந்தாலும் சிலருக்கு வருத்தம் இப்படி யாராவது ஒருத்தருக்கு ஒரு முறையாவது அவரின் மீது  சலிப்பு வருவது இயற்கை .அதற்கு அவரால் தான் என்ன செய்ய முடியும் .அதை கூட விடுங்கள் .நாட்டிற்கே சுதிந்திரம் வாங்கி கொடுத்து "மகாத்மா "என்று புகழ படும் "காந்தியை " கூட ஒருவர் அவர்  "கெட்டவர் " என்ற  நினைப்பில் தானே சுட்டு கொல்லபட்டார் .எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து .

       சாரி நண்பர்களே ...நிகழ்வுக்கு வருவோம் ..இந்த ஆண்டின் அடுத்த கொண்டாட்டம் மீண்டும் ஒரே சமயத்தில் "நான்கு புத்தங்கள் " அளித்து இந்த புத்தாண்டை "காமிக்ஸ் புத்தாண்டு "ஆக மாற்றிய ஆசிரியருக்கு நன்றி .இரண்டை நான்காக மாற்றி வந்திருந்தாலும் "இளைத்து " காணப்பட்ட வருத்தம் இருந்தாலும் ஒன்று பட கையில் நான்கு இதழ்கள் இருக்கும் பொழுது வந்த சந்தோஷம் தனி தான் .இம்முறை வந்த நான்கு இதழ்களின் அட்டைப்படமும் அசத்தல் ரகம் தான் .அச்சு தரத்திலும் இந்த முறை எந்த குறையும் இல்லை .இதே தரத்தில் இனி வந்தாலும் இனி மேலும் பக்கத்தை குறைக்காமல் இருந்தால் தான்  காமிக்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி குறையாமல் இருக்கும் .இதை சொல்ல காரணம் 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெளியீட்டு விளம்பரத்தில் 42 பக்கங்கள் என வருவது என்னை போன்ற "குண்டு "புத்தக விருப்பம் உடையவர்களின் ஆர்வத்தை இழக்க செய்யும் காரியம் மட்டுமல்ல ...ஒல்லி புத்தக ரசிகர்களின் விருப்பத்திற்கும் " குண்டு " வைக்கும் செயல் .
இந்த வருட முதல் மாதத்தில் லயன் ..,முத்து ..,சன்ஷைன் ..,கிராபிக் என நான்கு இதழ்கள் வந்தது போல "ஒல்லி "புத்தகம் வரும் காலம் எல்லாம் நான்கு இதழ்கள் வந்தால் அனைவரும் விரும்புவார்கள் .120 ரூபாய் புத்தகம் வரும் சமயத்தில் மட்டும் புத்தகத்தின் எண்ணிக்கை குறைத்தல் நன்று .அதே போல நான்கு இதழ்களுக்கு ஆசிரியரின் நான்கு "ஹாட் -லைன் " இல் வந்து உரையாடுவார் என நினைத்து சந்தோஷ பட்டால் இரண்டரை இதழ்களுக்கு மட்டும் வந்து உரையாடி விட்டு சென்று கடுப்படித்து விட்டார் ஆசிரியர் .அதிலும் புது புத்தகத்தில் ..,முதல் புத்தகத்தில் "ஆசிரியர் பக்கம் "எதுவும் இல்லை என்பது மிக வருத்தமான ஒன்று ..ஆசிரியர் தயவு செய்து இனி இதை தவிர்க்க வேண்டும் .அதே  போல பில்லர் பக்கத்தில் "லக்கியின் " குறுகிய கதையை படிக்கும் திருப்தியை விட "மதி இல்லா மந்திரி "போன்ற கதைகள் வருவது முழு நீள கதையை படித்த திருப்தி வருகிறது .முத்து காமிக்ஸ் ஹாட் லைனில் அடுத்த வெளியீடு பற்றி அறிவிப்பதை போல அணைத்து இதழ்களிலும் அதனை கடை பிடித்தல் நன்றாக இருக்கும் .

                                                                                                                                                                     

முத்து காமிக்ஸின் "சாக மறந்த சுறா " அட்டைபடம் உண்மையில் பழைய லயன் ..,முத்து அட்டை படத்தை பார்த்த திருப்தியை தந்தது .நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ருனோ வருவதில் பழைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல ..,புது ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் என்பது உண்மை .அதன் அழகான சித்திர தரம் ...அதிலும் வண்ணத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு அழகான பயணத்தை அளிக்கும் என்பது உறுதி .

லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை " அழகான கை ஓவிய அட்டைபடத்தில் ..,அட்டகாசமான சித்திர தரத்துடன் ..அருமையான கதை ஓட்டத்தில் "டைகர் " கதைகளுக்கு மாற்றாக உள்ளார் .இவரை தொடர்ந்து ஆசிரியர் கொண்டு வருவதுடன் லயன் 30 வது ஆண்டு மலரிலும் இவரை கொண்டு வருவது "கௌ -பாய் "ரசிகர்களுக்கு போனஸ் ஆக இருக்கும் என்பது மிக பெரும் உண்மை .அதே போல "சன் ஷைனில் "வந்த "பயங்கர புயல் "ஏற்கனவே கருப்பு வெள்ளையில் படித்தவர்களுக்கும் சரி ..கலரில் புதிதாக படிக்கும் பலருக்கும் சரி ....கடலில் மிதக்கும் அனுபவம் கண்டிப்பாக உண்டு .நான்காவது இதழை பற்றி "அட்டை படமே "சொல்லி விடும் வித்தியாசமான கதை ஓட்டத்தை ....புத்தகத்தை புரட்டினால் ஓவிய களமே சொல்லி விடும் மாறு பட்ட களத்தை .மொத்தத்தில் "கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் இது என்பதால் இது எப்பொழுதும் மறக்க முடியாத இதழ் என்றும் கூறி கொள்கிறேன் .என்ன ஒன்று குறுகிய பக்கத்தில் குறுகிய இரண்டு கதைகளால் ஒரு முழு நீள கதையை படித்த அனுபவம் இல்லை எனினும் திருப்தி அளித்த புத்தகம் என்று தயங்காமல் சொல்லலாம் .

    மொத்தத்தில் இந்த புத்தாண்டில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ..,கொஞ்சமாக ...பரிமாறினாலும் திருப்தி உடன் பசி தீர்த்து ..,அதுவும் எந்த குறையும் இல்லாமல் பரிமாறிய இந்த மாதத்தை போல எந்த மாதமும் வந்தால் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வருடம் போல எப்பொழுதும் "புத்தாண்டு "தான் என்பது மீண்டும் மறக்க முடியாத உண்மை .

               மீண்டும் "கதை விமர்சனத்தில் " விரிவாக சந்திக்கலாம் நண்பர்களே ..நன்றி ...