வியாழன், 27 செப்டம்பர், 2012

COMICS ORU KANAKAALAMAA....?

நண்பர்களுக்கு ,                                                                                                                                            சென்ற எனது அறிமுக பதிவில்  வாழ்த்தி சென்ற அனைத்து அன்பர்களுக்கும் ,வாசித்து  மட்டும் சென்ற நண்பர்களுக்கும் ,பார்த்து நொந்து கொண்டே போன நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகள் .                                             நமது ப்ளாக் இன் தலைப்பே  காமிக்ஸ் இல் இருப்பதால் காமிக்ஸ் நண்பர்களே அதிகம் வருவார்கள் என்பது உறுதி .எனவே காமிக்ஸ் இன் சுவையை நாம் நன்கு அறிந்திருப்போம் .அதே சமயம் "ஹே  ...நீயும் காமிக்ஸ் படிப் பாயா ?" என்ற ஆச்சேரிய  பார்வையை விட  "இன்னுமா  இந்த பொம்மை புக்கெல்லாம் படிக்கிறாய் ! என்ற கேலி பார்வையை தான் நாம் அதிகம் சந்திதிருப்போம் .அப்படி கேற்கும் நண்பர்களுகு இனி நாம் பதில் சொல்லி அதை அவேர்களுகு புரிய வைக்கவும் முடியாது ,ரசிகக வைக்கவும் முடியாது     அவர்களுகு  நாம் பதில் சொல்லி நமது  ENERGY  யை  வேஸ்ட்  செய்வதை விட மௌனமே சிறந்த பதில் ஆக  இருக்கும் ஆனால்  அப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஒன்றை  மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .இனி உங்களால் இந்த காமிக்ஸ் என்னும் அறிய சுவையை  அறிய முடியாது .எங்களின் இந்த சிறு காமிக்ஸ் உலகத்தை புரிந்து கொள்ளவும் முடியாது            ஆனால்  தயவு  செய்து  உங்கள் குழந்தைகளுக்கு இந்த காமிக்ஸ் என்னும் அழகான   புத்தக நண்பனை அறிமுகபடுதுங்கள் .அது  அவர்களின் கற்பனை சக்தி ,சிந்தனை சக்தியையும்  அதிகரிக்க செய்யும் .அதை  விட்டு அவர்கள் சுட்டி டிவி யும் ,கார்ட்டூன் சேனல் ஐயும் பார்த்து ரசிப்பதை நீங்கள் ரசித்து கொண்டு இருந்தால் அவர்களின் பின் பொழுது வயது ரசிக்கும் படி இருக்காது  என்பதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே.                                                                   தமிழில் காமிக்ஸ் என்னும் உலகமே கனா காலமாகி விடுமா என்ற நிலையில் ,காமிக்ஸ் என்னும் ஒரே அழகிய குழந்தையும் தட்டு தடுமாறி தவழ்ந்து வந்த போதும் ,திடீர் ,திடீரென காணமல் நமக்கு பயம் காட்டிய  அந்த     குழந்தை ,.....,நான்  யானை அல்ல ,யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும் நான் குதிரை  டக்கென எழுவே ன் .என்ற கணக்காய் திடீர் எழுச்சியாய் , புத்தம் புது  காளையாய்  2012 முதல் புது அவதாரம்  எடுத்த அந்த குழந்தை தான்  நமது     விஜயன் சாரால் பெற்றடது ,வளர்த்த  நமது  LION .MUTHU COMICS .                                  இப்போது மாதம்  தவறாமல் ரூபாய்  100 விலை இல் முழு வண்ணத்தில்      அயல் நாட்டு தரத்தில் ,பெரிய சைஸ் இல் வரும் இந்த காமிக்ஸ் புத்தகத்தை       வளர வைப்பது  நமது க டமை .படிக்கும் நண்பர்கள் தமது மற்ற நண்பர்கள்    ,உறவினர்கள் அணை வறிடுமும் ,படிக்காத நண்பர்கள் தமது வாருசு களு காகவும் அறிமுக படுத்துங்கள் .இது  விஜயன் சாருக்கு மட்டுமல்ல ,காமிக்ஸ்    உலகத் தி நரகே பெரும் உதவி .ஒவ்வொரு புத்தக கடையிலும் நமது காமிக்ஸ் தொங்க ,குழந்தைகள் அதை  வாங்கி தர சொல்லி அடம்பிடிக்கவும் ,ஜப்பான்        நாட்டில் ஒவ்வொரு  குடும்பமும் காமிக்ஸ் வாங்கி படிப்பதை பெருமை யாக    நினைக்கும் காலமும் ,இனி காமிக்ஸ் என்பது கனா காலமல்ல ,வளரும்  காலம் தான் என நிருபிக்கும்  நேரம் வந்து விட்டதா ?                                                                           காத்திருப்போம் தோழர்களே ....!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இது புதுசு.....

நண்பர்களே,                                                                                         நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி விட்டேன் .இதன் வரவேற்பு பொறுத்து தினம் ஒரு பதிவா? வாரம் ஒரு பதிவா ?மாதம் ஒரு பதிவா? அல்லது ஷட்டரை இப்போதே சாத்தலாமா என்பதை முடிவு எடுக்கலாம்.அதெற்கு முன் தமிழ் காமிக்ஸ் சை  தமிழ் நாட்டில்  வளர்த்த,வளர்த்தி கொண்டிருக்கும் ,வளர வைக்கும்  நமது ஆசிரியர் s .விஜியன் சார்       அவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றி .மேலும் இந்த ப்ளாக் எப்படி தொடங்க என முழித்த போது தனது பதிவின் மூலம் உதவி செய்த bladebedia கார்த்திக்,கம்ப்யூட்டர் பற்றி அனா ,ஆவன்னா கூட தெரியாத எனக்கு தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும் ,காமிக்ஸ் மூலமே நண்பர்கள் ஆன சேலம் ராஜ்குமார்,சங்ககிரி S .I .சிவதாஸ் சார்,காவல் துறை நண்பர் ஜான்,அருள் மற்றும் பலருக்கும் எனது அன்பான நன்றிகள்.    இந்த பதிவில் எனது காமிக்ஸ்இன்  சிறு வயது அனுபவம் ,எனது  வாழ்க்கையை கூட மாற்றிய காமிக்ஸ் நண்பர் ,என்னிடம் உள்ள  காமிக்ஸின் விமர்சன  பார்வை  என உங்களிடம் போர்  அடிக்க வருகிறேன்.   WAIT AND SEE ....(ஓவர் பில்ட் அப்  ஆகாது.அடங்கு )